நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நம்பிக்கை.. அவநம்பிக்கை.. இரண்டும் இரண்டு கருத்துக்கள் அல்ல, இரண்டும் இரண்டு லென்ஸ்கள் - வெள்ளிச் சிந்தனை

நம்பிக்கை.. அவநம்பிக்கை..
இரண்டும் இரண்டு கருத்துக்கள் அல்ல, இரண்டும் இரண்டு லென்ஸ்கள்.

பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு உள்ளது.

மழை பெய்யும்போது
அவநம்பிக்கையாளர் மேகத்தைப் பார்த்து வானத்தை சபிக்கிறார்.

நம்பிக்கையாளரோ மேகத்தைப் பார்த்து மழையைக் கொண்டு வந்ததற்கு நன்றி கூறுகிறார்.

சோதனையின்போது
அவநம்பிக்கையாளர், "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்று கேட்கிறார்.

நம்பிக்கையாளரோ, “இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?” என்று எண்ணுகிறார்.

விந்தை என்னவென்றால்.. பாதையும் ஒன்றுதான், பயணமும் ஒன்றுதான்.

ஆனால் ஒருவர் குழிகளை எண்ணியவாறு நடக்கிறார்.

மற்றொருவர் நட்சத்திரங்களை எண்ணியவாறு நடக்கிறார். 

நம்பிக்கை என்பது உலகம் அழகாக இருக்கிறது என்பதற்கான பொருளல்ல.

மாறாக, அதன் அசிங்கத்தை விட நீங்கள் வலிமையானவர் என்று பொருள்.

அவநம்பிக்கை என்பது நீங்கள் யதார்த்தமானவர் என்பதற்கான பொருளல்ல.

மாறாக, நீங்கள் நம்பிக்கையில் சோர்வடைந்துவிட்டீர்கள் என்று பொருள்.

இறுதியாக…

வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியான அட்டைகளையே தருகிறது.

நீங்கள் அதில் எப்படி விளையாடுகிறீர்கள்? என்பதில்தான் வேறுபாடு உள்ளது.

நம்பிக்கையுடனும் நல்ல சிந்தனையுடனும் இருங்கள்.

ஏனெனில், ஒரு முஸ்லிம் அப்படித்தான் இருக்க வேண்டும்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset