செய்திகள் சிந்தனைகள்
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
பூனைகளைக் குறித்து பல்வேறு செய்திகளை படித்திருப்போம். ஆயினும் அனைத்தையும் விட ஆச்சரியம் மிக்க செய்தி என்ன தெரியுமா?
அவை தங்கள் வீடுகளுக்குச் செல்லும் வழியை கண்டுபிடிக்கும் தனித் திறமைதான்.
இது தற்செயல் நிகழ்வு அல்ல. பல்லாண்டுகளாக விஞ்ஞானிகளையும் பூனைப் பிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஓர் அற்புதமான இயற்கைத் திறமை.
தொலைந்துபோன அல்லது வேண்டுமென்றே தொலைதூர இடங்களில் விடப்பட்ட பிறகும், 160 கி.மீ. பயணம் செய்து பூனைகள் வீடு திரும்பியதாக பல்வேறு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது Psi-trailing (ஆன்மாவின் பின்தொடரும் ஆற்றல்) என்று அழைக்கப்படுகிறது.
உரிமையாளர் வீட்டை காலி செய்துவிட்டு, வெகு தொலைவில் உள்ள புதிய ஊருக்குச் சென்றால்கூட, வழி கண்டுபிடித்து அந்த இடத்திற்கு வந்து சேரும் ஆற்றல் மிக்கவை.
பூனைகள் தங்கள் வீடுகளை எவ்வாறு அடையாளம் காண்கின்றன?
அவற்றுக்கு தனித்துவமான புலன்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அவை:
1. காந்த உணர்வு: புலம்பெயர்ந்த பறவைகள், கடல் ஆமைகளைப் போன்றே, பூனைகளும் பூமியின் காந்த சக்தியை உணர்ந்து அவற்றின் திசையைத் தீர்மானிக்கின்றன.
2. வித்தியாசமான வாசனை உணர்வு: பல வாரங்கள் அல்லது பல நாட்கள் நீடிக்கும் அளவுக்கு பழக்கமான வாசனைகளையும் தடயங்களையும் கூட பூனைகளால் கண்டறிய முடியும். ஏனைய வாசனைகளில் இருந்து பூனைகளால் அவற்றைப் பிரித்தறிய முடியும்.
இந்தத் திறன்கள் பூனைகளுக்கு ஒரு துல்லியமான மன வரைபடத்தை வழங்குகின்றன. இதனால் அறிமுகம் இல்லாத நிலப்பரப்பில் கூட வியக்கத்தக்க வகையில் அவற்றால் செல்ல முடிகிறது.
ஒரு பூனை அதன் வாழ்விடத்துடனும் அதன் உரிமையாளருடனும் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பைக் கொண்டிருக்கும்போது இந்த உள்ளுணர்வு வலுவடைகிறது.
பூனைகளின் புத்திசாலித்தனம், விடாமுயற்சி, பொறுமை, மீள்தன்மை ஆகியவற்றுக்கு இது ஒரு சான்றாகும்.
படைப்புகளில் மறைந்திருக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
நபி (ஸல்) கூறினார்கள்: "பூனை அசுத்தமானது அல்ல; உங்களைச் சுற்றி வலம் வரக்கூடிய வீட்டு விலங்குகளில் அதுவும் ஒன்று”. (அபூதாவூத், திர்மிதி)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
January 10, 2026, 8:09 am
மருங்கிப் போகத் தயாராகிறதா இந்தியாவின் மருத்துவத் துறை..?
January 9, 2026, 8:26 am
உங்கள் நேர்மையை, உண்மையான பண்புகளை அறியாதவர்களை இறைவனிடம் விட்டுவிடுங்கள் - வெள்ளிச் சிந்தனை
January 4, 2026, 9:02 am
அமெரிக்கா, வெனிசூயேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
January 2, 2026, 7:00 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 26, 2025, 7:04 am
எதையும் செய்யாத பெண்ணா? - வெள்ளிச் சிந்தனை
December 25, 2025, 11:51 am
