செய்திகள் சிந்தனைகள்
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பலமுறை பெரிதாக்கப்பட்ட ஒருவகை பூச்சியின் பிம்பம்தான் கீழே உள்ளது. இந்த சின்னப் பூச்சி தினமும் நம்முடன் தூங்குகிறது.
மெத்தைகள், போர்வைகள், தலையணைகளில் இவை வாழ்கின்றன.
போர்வைகளைத் துவைப்பதால் இவை பாதிப்படைவதில்லை. அப்போதும் அப்படியே இருக்கும். ஆனால் தூங்கச் செல்லுமுன் மூன்றுமுறை படுக்கையை தட்டுவதன் மூலம் இவை வெளியேறிவிடும்.
இதற்கு ஓர் அறிவியல் அடிப்படை உள்ளது. என்னவென்றால், ஒருவர் படுக்கைக்குச் செல்லும்போது இவை உதிர்ந்து மெத்தையில் விழுகின்றன. அவர் எழுந்த பின்னரும் அவை மெத்தையிலேயே இருக்கும்.
மீண்டும் தூங்கும்போது அதிகமான செல்கள் உதிர்ந்து ஆகிஸிஜன் ஏற்றப்பட்டு உடலில் நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன.
இவை சாதாரணக் கண்களுக்கு தென்படுவதில்லை. நுண்ணோக்கி மூலம் மட்டுமே தெரியும்.
இவற்றை எவ்வாறு அகற்றுவது என்று மேற்கத்திய உலகம் திகைத்தது. மெத்தையை துவைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றனர். ஆனால் அப்போதும் அவை அப்படியே இருந்தன.
அப்போதுதான் ஒரு விஞ்ஞானி கைகளால் மூன்று முறை படுக்கையைத் தட்டினார். ஆச்சரியம். அவை மறைந்துவிட்டன. படுக்கையில் இருந்து அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பதைக் கண்டுபிடித்து விட்டதாக அவர் மகிழ்ந்தார்.
இதை பெரிய கண்டுபிடிப்பு போன்று ஓர் ஆய்வரங்கத்தில் அவர் கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு முஸ்லிம் கூறினார்:
இது தொடர்பாக இறைத்தூதர் (ஸல்) ஏற்கனவே கூறியுள்ளார்கள்: "நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது” (புகாரி)
ஆயினும் விஷ ஜந்துக்களை விரட்டுவதற்காகத்தான் படுக்கையைத் தட்டுமாறு நபிகளார் கூறினார்களா என்றால் அது குறித்து உறுதியாகத் தெரியாது.
விவகாரம் அதைவிடப் பெரியதாகவும் இருக்கலாம்.
நமது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யுமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் ஆணை பிறப்பிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உறுதி.
ஒன்று மட்டும் நிச்சயம்! நாம் தனியாகத் தூங்கவில்லை. பூச்சுகளும் நம்முடன் தூங்குகின்றன.
எனவே தினமும் படுக்கச் செல்லுமுன் படுக்கையை தட்டுவோம்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
