நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

"அமைதிக்கான நோபல் பரிசு பெற உலகில் என்னைவிட வேறு யாருக்கு தகுதி இருக்கிறது…?’’ - டொனால்ட் டிரம்ப் மீண்டும் கேட்கிறார்

''அமைதிக்கான நோபல் பரிசு பெற உலகில் என்னைவிட வேறு யாருக்கு தகுதி இருக்கிறது…?’’
 
என மீண்டும் கேட்டு டிமாண்ட் வைத்துள்ளார் டிரம்ப்.

அதுவும் எந்தச் சூழ்நிலையில் கேட்கிறார் என்றால், 

சர்வதேச சட்டங்களை துச்சமாக மதித்து,

ஐ. நா. சபையின் கண்டணங்களை  புறந்தள்ளிவிட்டு,

சின்னஞ் சிறிய வெனிசுலா நாட்டிற்குள் அத்துமீறி படைகளை அனுப்பி, அந்த நாட்டு அதிபரை கைது செய்து சிறையில்  தள்ளிவிட்டு, அங்குள்ள எண்ணெய் வளத்தை பங்கு போட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அழைத்து கலந்துரையாடியவராக வெளியில் வந்து பத்திரிகையாளர்களிடம் தன்னை அமைதிக்கான நாயகனாகச் சொல்கிறார்!

அதுவும் வெனிசுலாவோடு நிறுத்தப் போவதில்லை, கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட  லத்தின் அமெரிக்க நாடுகளையும், கனடாவையும் கைப்பற்றி தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும்  ஆதிக்க அதிகார வெறியை அப்பட்டமாக சொல்லிக் கொண்டே அமைதிக்கான நோபல் பரிசுக்கும் தன்னை முன்னிறுத்துகிறார்.

டிரம்ப் உண்மையிலேயே முளைக் கோளாறு உள்ளவரா?  

இல்லை, இந்த உலகத்தாரையே முட்டாள்களாக நினைக்கிறாரா? தெரியவில்லை.

அமைதிக்கு நோபல் பரிசு இருப்பது போல,    அராஜகத்திற்கும் ஒரு உலக விருது இருந்தால்,      அதற்கும் தானே தகுதியனவன் எனக் கேட்டு இருப்பார்.

நல்லோருக்கு உலகமில்லை. 
பொல்லாருக்கே இது காலம் - இதை
எல்லோரும் புரிந்து கொள்வீர்! 
வல்லானே வாழ்வான் 
அல்லாதவன் வீழ்வான் - எனச் 
சொல்லாமல் சொல்கிறாரோ?

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset