நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியீடு கண்டது

விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. 

இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமீதா, பிக் பாஸை விட்டு வெளியேறியதாக நேற்றைய நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. ஆக தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸில் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் ப்ரோமோ 3

இந்நிலையில் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அப்போது கமலிடம் பேசும் ராஜு, ‘சாப்பிடுற அளவுக்கு யாரும் பாத்ரூம் யூஸ் பண்றது இல்ல சார். இவன் என் டீம் தான். ஆனா நா பாத்ததே கிடையாது’ என அபிஷேக்கை போட்டுக் கொடுக்கிறார். தொடர்ந்த அவர், ‘பாத்ரூம் கழுவ சொன்னா, அவன் போகும் போது கழுவுறத வேற ஆனந்தமா சொல்றான் சார்’ எனக் கூற, ‘சிறப்பா செஞ்சிட்டாரு’ என்கிறார் அபிஷேக்.

இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது. ஆனால் அடுத்தவாரம் கட்டாயம் இருக்கும். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேரும் முதல் நபர் யாரென தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset