நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகை பிடித்த விவகாரம்: மலேசிய சுகாதார அமைச்சு 98,000 அபராதங்கள் விதிப்பு 

கோலாலம்பூர்:

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடித்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மலேசிய சுகாதார அமைச்சு 98,000 அபராதங்களை விதித்துள்ள வேளையில் அதன் அபராத தொகை 24.5 மில்லியன் ரிங்கிட் உட்படுத்தியது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார் 

கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு இந்த எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது. மலேசிய சுகாதார அமைச்சு மிகவும் கடுமையான முறையில் இந்த விவகாரத்தை பார்க்கும் அதேவேளையில் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிக்கும் நடவடிக்கையைத் துடைதொழிக்கும் விதமாக கடந்த அக்டோபர் 11ஆம் தேதி OPERASI MEGA BERSEPADU எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது 

இந்நிலையில் நடப்பில் உள்ள 852ஆவது சட்டத்தை அமல்படுத்தும் விதமாக அனைத்து தரப்பினரும் மலேசிய சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தாம் கேட்டுகொள்வதாக டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset