நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் முழுமையாக பயனளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

மடானி அரசாங்கத்தின் பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் முழுமையாக பயனளிக்க வேண்டும்.

பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கடந்த வெள்ளிக்கிழமை மக்களுக்கு தாக்கல் செய்தார்.

இதில் இந்திய சமுதாயத்திற்கு என மொத்தம் 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பலரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

இருந்த போதிலும் மடானி அரசாங்கத்தின் பட்ஜெட் அனைவருக்குமானது என பதில் கூறப்படுகிறது.

அனைவருக்கான பட்ஜெட் என்பது நல்ல விஷயம் தான்.

ஆனால் அப்பட்ஜெட்டின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை மடானி அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதில் எந்த சமுதாயமும் ஒதுக்கப்படக் கூடாது. குறிப்பாக வளர்ச்சியில் எந்த சமூக மக்களும் பின்தங்கி விடக் கூடாது.

இதற்கு முறையான அமலாக்க திட்டங்கள் இருக்க வேண்டும்.

மேலும் அரசாங்கம் முறையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset