நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல் 

கோலாலம்பூர்: 

தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களான கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

இதனால் 20 மில்லிமீட்டர் வரைக்குமான மழையும் சூரைக்காற்றும் வீசும் அதேவேளையில் பெருமழையை எதிர்பார்க்கலாம் என்று மெட் மலேசியா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

கெடா மாநிலத்தில் உள்ள கோத்தா ஸ்டார், பொக்கோ செனா, பாடாங் தெராப், பெண்டாங், பாலிங், கூலிம், பண்டார் பாரு ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்யவிருக்கிறது 

அதேவேளையில் பினாங்கு மாநிலம் முழுவதும் இதே நிலைமையை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset