நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் தேவையை முதன்மையாக கொண்டுள்ளது: நூருல் இசா அன்வார் பாராட்டு 

கோலாலம்பூர்:

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் தேவையை முதன்மையாக கொண்டுள்ளது என்று பினாங்கு மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் நூருல் இசா அன்வார் பாராட்டு தெரிவித்துள்ளார் 

நாட்டு மக்களின் நலன்கள் முதன்மையாக பார்க்கப்படுகிறது. அதுவே நடப்பு மடானி அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. மேலும், அரசாங்கம் புதிய நிதியை ஒதுக்கீடு செய்யும் அதேவேளையில் மக்களின் மேம்பாடு ஆகியவை கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார் 

மேலும், 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வியமைச்சுக்கு எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படும் கருத்திற்கு நூருல் இசா அன்வார் மறுப்பு தெரிவித்தார் 

கல்வி தரத்தை மேம்படுத்துவதிலும் பள்ளிகளைச் சீரமைக்கவும் கல்வி அமைச்சு தொடர்ந்து தங்களின் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார். 

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் அன்வார் தாக்கல் செய்த 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒட்டுமொத்தமாக 421 பில்லியன் ரிங்கிட் ஆகும்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset