நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூக்குத்தி பேலஸின் மூன்றாவது கிளை தைப்பிங்கில் திறப்பு விழா கண்டது; 5,000 வடிவங்களில் புது ரக மூக்குத்திகள்: டத்தின் சித்தி ஆயிஷா

தைப்பிங:

நாட்டில் புகழ் பெற்ற மூக்குத்தி பேலஸின் மூன்றாவது கிளை தைப்பிங்கில் கோலாகலமாக திறப்பு விழா கண்டது.

இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்கள் கொண்ட மூக்குத்திகள் வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு உள்ளது என்று அதன் உரிமையாளர் டத்தின் சித்தி ஆயிஷா கூறினார்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவங்களில் மூக்குத்திகளை விற்க வேண்டும் என்ற நோக்கில் தான் ஈப்போவில் இந்த மூக்குத்தி பேலஸ் நகைக்கடை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது கிளை நிறுவனம் தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திறக்கப்பட்டது.

இன்று தைப்பிங்கில் மூன்றாவது கிளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இங்கு  5000க்கும் மேற்பட்ட வடிவங்களில் மூக்குத்திகள் வாடிக்கையாளர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் கால் சங்கிலி, கொலுசு, வைரம், ராசி கற்கள் பொறிக்கப்பட்ட சங்கிலிகள் உட்பட பல தங்க ஆபரணங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் திறப்பு விழாவை முன்னிட்டு கழிவு விலையில் மூக்குத்திகள் விற்கப்படுகிறது.

குறிப்பாக மக்களுக்கு ஏற்றவாறு நியாயமான விலையில் தான் மூக்குத்திகள் உட்பட அனைத்து ஆபரணங்களும் விற்கப்படவுள்ளது.

ஆகவே ஈப்போ, கோலாலம்பூர்  போன்று தைப்பிங்கில் உள்ள வாடிக்கையாளர்களும் எங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மன திருப்தி அடையும் வகையில் மூக்குத்தி வடிவங்கள் ரகம் ரகமாக உள்ளது.

அது வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திரளாக இங்கு வர வேண்டும் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாக  டத்தின் சித்தி ஆயிஷா கூறினார்.

இன்றைய திறப்பு விழாவில் மூக்குத்தி பேலஸ் உரிமையாளர் டத்தோ முஹம்மத் அனுவார் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset