
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் தலைமைப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக மலேசியா ஏற்றுக் கொண்டது
லாவோஸ்:
ஆசியான் தலைமைப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக மலேசியா ஏற்றுக் கொண்டது.
44, 45ஆவது ஆசியான் உச்சி மாநாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
இந்த கூட்டங்களின் முடிவைக் குறிக்கும் வகையில், லாவோஸ் ஆசியான் தலைமைப் பதவியை அதிகாரப்பூர்வமாக மலேசியாவிடம் ஒப்படைத்தது.
நிறைவு விழாவில் பிராந்திய முகாமின் தலைமையை மாற்றுவதை அடையாளப்படுத்தியது.
மேலும் மலேசியா ஆசியான் தலைமைக்கு வழி வகுத்தது.
லாவோஸ் பிரதமர் சோனேச்சே சிபாண்டோன் தமதுரையில்,
லாவோஸ் தலைவர் பதவியில் இருந்த போது பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு, ஆதரவிற்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அதன் பின் உரையாற்றிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்,
ஆசியானின் முக்கிய மதிப்புகளையும் முன்னுரிமைகளையும் ஆதரிப்பதற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
அதே நேரத்தில் மலேசியாவின் தலைமையின் கீழ், இந்த பிராந்திய கூட்டமைப்பு தென்கிழக்கு ஆசியாவை அமைதியான, நிலையான, வளமான பிராந்தியமாக தொடர்ந்து பராமரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்