நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி

புத்ராஜெயா: 

இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டின் இந்தியர் நலன்சார் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி இதனை கூறினார்.

கல்வி எல்லாருக்குமான அழியா சொத்தாகும். இது அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

அதன் அடிப்படையில் தான் ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் வரை அனைவருக்கும் உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் உயர் கல்விக் கூடங்களில் கல்வியை தொடங்கவிருக்கும் 200 மாணவர்களுக்கு துணைப் பிரதமர் அலுவலகத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

கல்வி கட்டணம் உட்பட கற்றல் கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டது.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடியின் ஆலோசனையின் பேரில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

வரும் காலங்களில் இந்த உதவிகள் தொடரும் என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

இதனிடையே உதவிகள் பெற்ற மாணவர்கள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டிற்கும் அர்விந்த் அப்பளசாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset