நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் டிக் டாக் நிறுவனத்தின் பணியாளர்கள் பணிநீக்கம்

கோலாலம்பூர்: 

உலகளாவிய நிலையில் டிக் டாக் நிறுவனம் தனது பணியாளர்கள பணி நீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது மலேசியாவில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதனை டிக் டாக் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது. 

உலகளவில் நூற்றுக்கணக்கானோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதையும் டிக் டாக் உறுதிப்படுத்தியது. 

இதனிடையே, மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் பணிநீக்க மின்னஞ்சல்களைப் பெற்றுள்ளனர்.

இந்த முடிவு டிக் டாக்கின் உள்ளடக்க மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை டிக் டாக் நிறுவனம் எதிர்ப்பார்க்கின்றது. 

80% தேவையற்ற உள்ளடக்கம் இப்போது தானியங்கி தொழில்நுட்பங்களால் அகற்றப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset