நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் 

ஈப்போ: 

கடந்த மாதம் குடிநுழைவு துறை அதிகாரி ஒருவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஈப்போவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தின் முதலாளிக்கு இங்குள்ள ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது 

குற்றஞ்சாட்டப்பட்ட 37 வயதான வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ரெசவுல் ஷாஜஹான் நீதிபதி டத்தோ இப்ராஹிம் ஒஸ்மான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புகொண்டார் 

குற்றச்சாட்டின் அடிப்படையில் தங்கள் கீழ் உள்ள 13 தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக குடிநுழைவு துறை அதிகாரிக்கு இந்த லஞ்சம் வழங்கப்பட்டது 

நாசி கண்டார் முதலாளிக்கு எதிராக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 214யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது 

நீதிமன்ற வாதத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளான ஷாருல் அஸுவான் கஸாலி, முஹம்மத் அஃபிக் அட்னான் இருவரும் வழிநடத்தினர்

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset