நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி

கோலாலம்பூர்: 

60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

ஜெனிரா கிரியேடிவ் நிறுவனத்தைச் சேர்ந்த காயத்ரி தண்டபாணி இதனை கூறினார்.

ஜெனிரா கிரேட்டிவ் நிறுவனமும் இவேன்சர் சொலுசன்ஸ் நிறுவனமும் இணைந்து அடுத்து பல நிகழ்ச்சிகளை படைத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக காதலிக்க நேரமில்லை கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க 60, 70ஆம் ஆண்டுகளில் வெளிவந்த புகழ் பெற்ற பாடல்களை கொண்டு இக்கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு நாளை அக்டோபர் 12ஆம் தேதி இரவு 7 மணிக்கு கேஎல்சிசி பிளேனரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 2,000 பேர் இந்நிகழ்ச்சியை நேரடியாக காணவுள்ளனர்.

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற பாடகியான கல்பனா ராகவேந்தர் தலைமையில் சூப்பர் சிங்கர் புகழ் சத்திய பிரகாஷ், மாளவிகா, சைட் சுபாஹான், முத்து சிற்பி, ஶ்ரீதர் சேனா, அனு ஆனந்த் ஆகியோர் தங்களின் படைப்புகளை வழங்கவுள்ளனர்.

குறிப்பாக விஜய் டீவி புகழ் மணி அன்ட் பேன்ட் இசைக் குழுவினர் நேரடி இசையை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி மூத்தவர்களை தவிர்த்து இளைஞர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்று காயத்ரி கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset