நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 

கோலாலம்பூர்: 

கிளோபல் இக்வான் தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸலினா ஒத்மான் கூறினார் 

சம்பந்தப்பட்ட நடவடிக்கை அறிக்கைகள் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், மற்றும் மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோருக்கு முறையாக விளக்கம் அளிக்கப்படும் என்று அஸலினா தெரிவித்தார் 

அறிக்கைகள் தாக்கல் செய்த பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பார்கள். கிளோபல் இக்வான் தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகள் முன் வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார் 

2017ஆம் ஆண்டுக்கான சிறார்கள் பாலியல் தடுப்பு சட்டமே நடைமுறையில் போதுமானதாக உள்ளது. இருக்கும் சட்டங்களைக் கொண்டு அதன் நடைமுறைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார் 

கிளோபல் இக்வான் நிறுவனம் சிறார்களுக்கு அநீதியை இழக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக பல்வேறான நடவடிக்கைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset