
செய்திகள் ASEAN Malaysia 2025
அமைதியை நிலைநாட்ட ஆசியான் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அன்வார் வலியுறுத்து
வியன்டியான்:
அமைதியை நிலைநாட்ட ஆசியான் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
உலகில் பதற்ற சூழல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இவை யாவும் ஆசியான் நாடுகளுக்கிடையிலான ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் விஷயங்களை நிராகரிப்பது ஆசியானின் உறுப்பு நாடுகளான நமது பொறுப்பு என்றும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
ஆகவே, அனைத்து விவகாரங்களிலும் இணைந்து செயல்படுவதில் ஆசியான் நாடுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை