செய்திகள் மலேசியா
தீபாவளிக் கடைகளை கலை நிகழ்ச்சிக்காக அகற்றச் சொல்வதா?: பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வணிகர்கள் கொதிப்பு
கோலாலம்பூர்:
தீபாவளிக் கடைகளை கலை நிகழ்ச்சிக்காக அகற்றச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இந்திய சிறுதொழில் வணிகர்கள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் 22 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் நீர் தேக்கம் எதிர்புறத்தில் அந்த 22 கடைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், இதர பொருட்களும் இப்போது அடுக்கி வருகிறார்கள்.
ஆனால், திடீரென்று 8 கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தீபாவளிக்காக கலைவிழா நடத்த மேடை அமைக்கப்படுவதால் இந்த எட்டு கடைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடைகளை அமைத்த பின்னர் அந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று இப்போது உத்தரவு பிறப்பிப்பது எந்த வகையில் நியாயம் என்று பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் குணசீலன் கேள்வி எழுப்பினார்.
பிரிக்பீல்ட்ஸ் இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியில் எங்களுக்கு கடைகள் கிடைத்துள்ளது.
ஆனால் மேடையை காரணம் காட்டி 8 கடைகளை அகற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தீபாவளி கலைவிழா நடத்த வேறு பல இடங்கள் உள்ளன. எதாவது ஓர் இடத்தில் அவர்கள் மேடையை அமைத்து கொள்ளலாம்.
எங்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று சிறு வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 6:33 pm
கிழக்கு மலேசியாவில் வானிலை எச்சரிக்கை
May 30, 2026, 6:18 pm
காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு
May 30, 2026, 4:08 pm
ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி
May 30, 2026, 4:07 pm
தடம் மாறிய 4 எல்ஆர்டி ரயில் பெட்டிகள் ஆய்வுக்காக கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன
May 30, 2026, 3:23 pm
சுங்கை பூலோவில் தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன
May 30, 2026, 3:17 pm
