செய்திகள் மலேசியா
சுங்கை பூலோவில் தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன
சுங்கைபூலோ:
இங்குள்ள ஜாலான் கம்போங் பாரு சுங்கை பூலோவில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை தெரிவித்தார்.
காலை 7.32 மணிக்கு அழைப்பு வந்தவுடன், சுங்கை பூலோ தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
இரண்டு வகை தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
முதல் வளாகத்தில் உள்ள வன்பொருள் தொழிற்சாலை 90 சதவீதம் எரிந்துவிட்டது.
இரண்டாவது தொழிற்சாலையான மரச்சாமான்கள் தொழிற்சாலை 60 சதவீதம் எரிந்துவிட்டது.
இரண்டு இடங்களிலும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 6:33 pm
கிழக்கு மலேசியாவில் வானிலை எச்சரிக்கை
May 30, 2026, 6:18 pm
காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு
May 30, 2026, 4:08 pm
ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி
May 30, 2026, 4:07 pm
தடம் மாறிய 4 எல்ஆர்டி ரயில் பெட்டிகள் ஆய்வுக்காக கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன
May 30, 2026, 3:17 pm
