செய்திகள் மலேசியா
உலகளாவிய விநியோக நெருக்கடி: பேராசை பிடித்த வர்த்தகர்களை கேபிடிஎன் கண்காணிக்கிறது
புத்ராஜெயா:
உலகளாவிய விநியோக நெருக்கடியை தொடர்ந்து பேராசை பிடித்த வர்த்தகர்களை கேபிடிஎன் கண்காணிக்கிறது.
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கேபிடிஎன்) அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் இதனை கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக கச்சா எண்ணெய் விலையேற்றத்தைத் தூண்டிய உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து,
லாப மீட்டும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சு வரும் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 'ஆப்ஸ் கெசான் 6.0' என்ற சோதனை நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.
மூலப்பொருள், செயல்பாட்டு, வணிகச் செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஏற்படும் விலையேற்றத்தை வர்த்தகர்கள் நியாயமற்ற முறையில் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
நாட்டில் விநியோகச் சங்கிலி, விநியோகச் செலவுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீது உலகளாவிய விநியோக நெருக்கடியின் படிப்படியான தாக்கம் எதிர்பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மூலப்பொருள், செயல்பாட்டு அல்லது வணிகச் செலவுகள் அதிகரிப்பதை வர்த்தகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நியாயமற்ற அதிக லாபத்தைப் பெறுவதைத் தடுக்கவும், உறுதி செய்யவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 6:33 pm
கிழக்கு மலேசியாவில் வானிலை எச்சரிக்கை
May 30, 2026, 6:18 pm
காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு
May 30, 2026, 4:08 pm
ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி
May 30, 2026, 4:07 pm
தடம் மாறிய 4 எல்ஆர்டி ரயில் பெட்டிகள் ஆய்வுக்காக கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன
May 30, 2026, 3:23 pm
