நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி

கோலாலம்பூர்:

பெர்சாமா கட்சியை விலைக்கு வாங்கியதாகக் குற்றம் சாட்டி டிக்டாக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதில்லை.

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இவ்வாறு கூறினார்.

நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தனது நேரத்தை வீணடித்து, அதன் மூலம் பெர்சாமாவுடனான தனது முயற்சிகளைப் பாதிக்கும்.

உண்மையில், வழக்குத் தொடர்ந்தால், நான் ஜெயித்துவிடுவேன். உடனடியாக ஜெயித்துவிடுவேன், சரிதானே?

ஆனால், பல விஷயங்கள் சரியாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும்.

அதற்குக் காரணங்களில் ஒன்று, நான் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர் விரும்புவது தான்.

ஏனென்றால், நீங்கள் ஒரு வழக்கிற்காக வழக்குத் தொடரும்போது, ​​பல வருடங்களுக்கு அந்த நீதிமன்ற வழக்கோடு நீங்கள் கட்டுப்பட்டிருக்கிறீர்கள்.

மேலும் அது எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நேரம் என்பது எங்களுடைய நேரம் தான்.

குறிப்பாக வழக்கைத் தாக்கல் செய்ய மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset