செய்திகள் மலேசியா
தடம் மாறிய 4 எல்ஆர்டி ரயில் பெட்டிகள் ஆய்வுக்காக கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன
கோலாலம்பூர்:
தலைநகர் சான் சோ லின் நிலையம் அருகே தடம் மாறிய ரயில் பெட்டிகள், தொழில்நுட்பக் குழுவினரால் வெற்றிகரமாக தண்டவாளத்தில் வெளியேற்றப்பட்டு, ஆய்வு, மேலதிக நடவடிக்கைகளுக்காக கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன.
நேற்றும் இன்று அதிகாலையும் மேற்கொள்ளப்பட்ட ரயில் சீரமைப்புப் பணியில், ரயில் பெட்டிகளையும் சிறப்புத் தண்டவாள வாகனங்களையும் இணைத்து, பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அவை வெளியே செல்வதை சாத்தியமாக்கும் செயல்முறை அடங்கியிருந்ததாக ரேப்பிட் கேஎல் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கான பாதுகாப்பான, வசதியான பயணத்தை கூடிய விரைவில் மீட்டெடுப்பதை உறுதிசெய்ய, பணிகள் தீவிரமாகத் தொடர்கின்றன என்று ரேப்பிட் கேஎல் கூறியது.
கடந்த வியாழக்கிழமை, சான் சோ லின் நிலையம் அருகே தண்டவாள மாற்றி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் வழித்தட ரயில் தடம் விலகியதால், சேவை அட்டவணைகள் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட தண்டவாளம், அதிகபட்சமாக அடுத்த புதன்கிழமைக்குள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 6:33 pm
கிழக்கு மலேசியாவில் வானிலை எச்சரிக்கை
May 30, 2026, 6:18 pm
காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு
May 30, 2026, 4:08 pm
ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி
May 30, 2026, 3:23 pm
சுங்கை பூலோவில் தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன
May 30, 2026, 3:17 pm
