நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் வைகாசி விசாகம் கொண்டாட்டம்: பக்தர்கள காவடிகள், பால் குடங்களை ஏந்தி முருகனுக்கு காணிக்கை செலுத்தினர்

ஈப்போ:

ஈப்போவில் வைகாசி விசாகம் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா. இந்த நாளில் தான் முருகப்பெருமான் எதிர்த்ததாக ஐதீகம்.

உலகம் முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஈப்போ, ஜாலான் லகாட்டில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் கடந்ந 120 ஆண்டுகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வழக்கதமிற்கு மாறாக அதிகமான பக்தர்கள காவடிகள், பால் குடங்களை ஏந்தி முருகனுக்கு காணிக்கை செலுத்தினர்.

காலை 9 மணியளவில் ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தடி விநாயகர் ஆலயதில் இருந்து பக்தர்கள் ஒன்று சேர்ந்து பால் குடங்களை சுமந்து வந்தனர்.

பின்னர் பக்தர்கள சுமந்து வந்த பாலை முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க்கப்பட்டது.

இன்றிரவு முருகப் பெருமானின் நகர் உலவலமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset