நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டமாரானில் இந்தியர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 10 பேர் கைது: போலிஸ்

ஷா ஆலாம்:

கிள்ளான் பண்டமாரானில் இந்தியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இதனை கூறினார்.

கடந்த வாரம் பண்டமாரானில் உள்ள பங்களா வீட்டில் புகுந்த முகமூடி கும்பல் கத்தி முனையில் கொள்ளையடித்த 6 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களுடன் தப்பியோடியது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரு பெண் உட்பட 23 முதல் 46 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் நெகிரி செம்பிலான் மந்தின், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அதிகமான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதுடன் தேவைப்பட்டால் காயம் விளைவிக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

இந்த கும்பலிம் தலைவன் என்று நம்பப்படும் 30 வயது ஆடவன் ஒருவன் இரண்டு கொலை வழக்குகள் உட்பட 14 குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளார்.

மற்ற இரண்டு உறுப்பினர்களுக்கு முறையே ஏழு மற்றும் 13 கொள்ளை சம்பவ பதிவுகள் உள்ளன.

மேலும் கைதானவர்களுடம் இருந்து  79 சென்டிமீட்டர் நீளமுள்ள அரிவாள் உட்பட பல்வேறு திருட்டுக் கருவிகளையும் போலிஸார் பறிமுதல் செய்தனர் என்று அவர் கூறினார்.

எளிதாக கதவை உடைக்க கூடிய வீடுகளை குறிவைப்பதுடன் அந்த வீடுகளில் திருடுவதற்கான திட்டங்களையும் இந்த கும்பல் தீட்டுகிறது.

அதிகாலையில் வீட்டுக் கதவை தட்டுவதுடன் கதவு திறந்தால் உடனே உள்ளே சென்று அங்குள்ள விலை உயர்ந்த பொருட்கள், நகைகள், பணத்தை திருடிச் செல்வதை இந்த கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset