நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு  15  ஆயிரம் ரிங்கிட்  நிதி

தஞ்சோங் ரம்புத்தான்:

தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதியில்  எழுந்தருளியுள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு பிரதமர் துறையின்  15 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம் அண்மையில் சிறப்படன் நடைபெற்று முடிந்தது.

சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்  செலவில் நிறைவுபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு நிதி கோரிக்கை பிரதமர்  துறை இலாகாவின் கவனத்திற்கு ஆலய நிர்வாகம் கொண்டுச் சென்றனர். 

இதனை கவனத்தில் எடுத்த பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் இந்த நிதியை  ஆலயத்திற்கு நேரடியாக வருகை அளித்து ஆலய பொறுப்பாளர்களிடம் அதற்கான மாதிரி காசோலையை வழங்கினார்.

இந்த நிதி போதாதுதான் எதிர் வரும் காலங்களில் ஆலயத்திற்கு மேலும் நிதி வழங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலயத் தலைவர் ராஜேந்திரனிடம்  சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

இந்த நிதி வழங்கும் நிகழ்வு ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன். சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset