நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்:  தியோ நீ சிங்

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வாரயிறுதி விடுமுறை நாள்களாக இருக்கும் என்ற மாற்றம் கூடுதலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். 

நாட்டின் பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்கவும் அது உதவும் என்று கருதப்படுகிறது. 

இந்த முயற்சி வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு ஜோகூர் மாநிலத்தின் வர்த்தக மதிப்பு 753 பில்லியன் ரிங்கிட்டாகப் ( ஏறத்தாழ 229 பில்லியன் வெள்ளி) பதிவாகியுள்ளது. 

மலேசியாவின் மொத்த வர்த்தகத்தில் அது 29 விழுக்காட்டுக்குச் சமம்.

கூலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ, வாரயிறுதி விடுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதற்கு அரசாங்க அமைப்புகள், தனியார் துறையினர், இதர தரப்பினருக்குப் போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார். 

சுமுகமான மாற்றம், ஒருங்கிணைப்பு, மாற்றத்தை அமல்படுத்துவதற்கு உரிய வகையில் அது அமைந்திருக்கும் என்றார் அவர்.

இந்த விதிமுறை அமலுக்கு வந்தபின் ஜொகூரின் அரசாங்க, தனியார்துறை நிர்வாகங்களும் பள்ளிகள் உட்படச் சமூகத்தின் பிற சாராரும் ஒட்டுமொத்தமாக சுமுகமான நடைமுறையைப் பின்பற்ற இது உதவும் என்று முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset