நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு

குவாந்தான்:

கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு கண்டுள்ளது தொடர்பில் பகாங் மாநில அரசு விசாரணைகளை நடத்தும்.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிம் சோன் சியாங் இதனை கூறினார்.

கேமரன்மலை மேடான் அக்ரோவில் வியாபாரத்திற்கு கடை வளாகங்கள் உள்ளது.

அக்கடைகளின் வாடகை 5 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 7,500 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது என புகார்கள் கிடைத்துள்ளது.

இப்புகார்கள் அனைத்தும் உண்மை தான்.

அதே வேளை இது குறித்து மாநில அரசின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset