நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொசிலாவாத்தி கொலை வழக்கு: இருவருக்கு எதிரான மரண தண்டனை நிலைநிறுத்தம் 

புத்ராஜெயா: 

கடந்த 14 வருடங்களுக்கு முன் நாட்டின் பிரபல பெண் தொழிலதிபர் டத்தோ சொசிலாவாத்தி லாவியா மற்றும் அவரின் மூன்று உதவியாளரையும்  கொலை செய்த விவகாரம் தொடர்பாக இரு குற்றவாளிக்கு எதிரான மரண தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்தது 

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் இந்த கொலை வழக்கு காரணமாக சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களான N..பத்மநாபன், T..திள்ளையழகன் ஆகியோர் மீதான மரண தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது என்று கூறினார். 

கொலைக்கான காரணங்கள் மற்றும் தரவுகள் யாவும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனையை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று செய்து கொண்ட விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரிப்பதாக அவர் சொன்னார். 

மற்றொரு குற்றவாளியான ஆர். காத்தவராயனும் தமக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை ஆராயும் படி மனு தாக்கல் செய்ய வேளையில் தமது தரப்பினர் மேற்கொண்ட விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் லத்திஃபா கோயா கூறினார். 

கட்டாய மரண தண்டனை ஒழிப்பு சட்டம் 2023 
நாட்டில் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் தங்கள் மரண தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்ற முயன்றனர்.  இது நீதிபதிகளுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க அதிகாரம் அளிக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset