நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலாம் ஆண்டைச் சேர்ந்த 122,000 மாணவர்கள் படித்தல், எழுதுதல், எண்ணுதலில் தேர்ச்சி பெறவில்லை: ஃபட்லினா வருத்தம் 

காஜாங்:

முதலாம் ஆண்டைச் சேர்ந்த 122,000 மாணவர்கள் படித்தல், எழுதுதல், எண்ணுதலில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் வருத்தத்துடன் கூறினார்.

மாணவர்களின் இந்நிலைக்கு கோவிட்-19 தொற்று முக்கிய காரணமாக உள்ளது.

அதே வேளையில் வறுமை, சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்களும் இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

பெரிய எண்ணிக்கையாக இருந்தாலும் இந்நிலை மாறும்.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

காஜாங்கில் தெகாட் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை அறிமுகம் செய்த பின் செய்தியாளர் சந்திப்பில் ஃபட்லினா இவ்வாறு கூறினார்.

இதில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset