நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கு விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உலு சிலாங்கூர்:

நூர் ஃபாரா கார்த்தினி கொலை வழக்கின் விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க கோல குபு பாரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இரசாயன, சவப்பரிசோதனை அறிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் 10-ஆம் தேதி சமர்பிப்பதற்கு இங்குள்ள கோல குபு பாரு நீதிமன்றம் தேதி குறித்துள்ளது.

அவ்விரு அறிக்கைகளும் இன்னும் தயாராகவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் எய்ரின் நபிலா அமானி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுருள் இஸ்ஸா பாஸ்ரி இந்த வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை நிர்ணயித்தார்.

இரசாயன, சவப்பரிசோதனை அறிக்கைகள் இன்னும் தயாராகவில்லை. 

ஆகவே, இந்த வழக்கிற்கான புதிய தேதியை நிர்ணயிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்று எய்ரின் கூறினார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லான்ஸ் கார்ப்ரல் முஹம்மத் அலிஃப் மோன்ஜானியின் வழக்கறிஞர் நுர் அய்டா முஹம்மத் ஜைனுடின் இந்த கோரிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

நூர் ஃபாரா கார்த்தினியின் குடும்பத்தின் சார்பில் கோ சீ கியான், முஹம்மத் நோராஸிஹான் அட்னான், லுக்மான் ஹக்கிம் அஸ்ஹார் ஆகியோர் வழக்கை கண்காணிக்கின்றனர்.

கடந்த ஜூலை 10ஆம் தேதிக்கு 15ஆம் தேதிக்கும் இடையே உலு பெர்ணாம், எஸ்கேசி செம்பனைத் தோட்டத்தில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான நூர் ஃபாரா கார்த்தினியைப் படுகொலை செய்ததாக முஹம்மத் அலிஃப் மீது கடந்த ஜூலை 26ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset