நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில்  மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது: செனட்டர் சரஸ்வதி

ஜார்ஜ்டவுன்:

2024ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீடு வரிசையில் 163 நாடுகளில் மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

இந்த பட்டியலில் ஆசியா ரீதியில் சிங்கப்பூருக்கு அடுத்து 2ஆவது இடத்தை மலேசியா பிடித்துள்ளது.

நேற்று இங்கு பினாங்கு வடகிழக்கு மாவட்ட அளவிலான ஒற்றுமை தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி கலந்து கொண்டு அவர் பேசினார்.

இந்நாட்டின் அமைதிக்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பு தான் காரணம் என்பதை இந்த குறியீடு காட்டுகிறது.

இந்த சாதனை நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் மதங்களுக்கிடையிலான அமைதி மட்டும் நல்லிணக்கத்தை வலுபெற செய்ய தேசிய ஒற்றுமை துறை அமைச்சு பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் சொன்னார்.

மலேசியர்களின் ஒற்றுமை ஒரு கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்பதே தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் இலக்கு.

பல இடங்களை ச் சார்ந்த நாடு என்ற நிலையில் சமூக பற்றாக்குறை சவாலை நாடு எதிர்நோக்கி வருகிறது.

இந்நாட்டில் மதங்களுக்கிடையிலான அமைதி மட்டும் நல்லிணக்கத்தை வலுபெற செய்ய தேசிய ஒற்றுமை துறை அமைச்சு பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset