நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதை விவகாரத்தில் சமரசம் இல்லை: ஃபட்லினா சிடேக் 

காஜாங்:

பள்ளிகளில் நிகழும் பகடிவதை விவகாரகங்களில் யார் ஈடுப்பட்டாலும் மலேசியக் கல்வி அமைச்சகம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

ஆசிரியர்களின் விசாரணைக்குப் பின் பகடிவதை விவகாரங்களில் ஈடுப்படும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். 

பகடிவதை என்பது குற்றச் செயலாகும். இவ்வகையான குற்றச் செயல்களில் யாருடைய பிள்ளை குறிப்பாக, பிரபலம்  அல்லது அமைச்சரின் பிள்ளைகள் ஈடுப்பட்டால் கூட அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த விவகாரத்தில் ஒருபோதும் கல்வியமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அவர். 

இது தொடர்பாக அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கல்வியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஸ்பைடர் குழுவின் பாடகர், டாம் ஸ்பைடர் என்றும் அழைக்கப்படும் ருஸ்தம் முஸ்தஃபா, தனது 14 வயது மகன் பகடிவதை பிரச்சனையால் பாதிக்கப்பட்டதைத் தெரிவித்தார். 

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி எந்தவொரு நடவடிக்கையில் எடுக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார். 

டாமின் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து, அதே பள்ளியில் பல பெற்றோர்கள் இதே விஷயத்தை வெளிப்படுத்த முன் வந்தனர்.

கடந்த சனிக்கிழமை, டாம் ஸ்பைடரின் மகன் மற்றும் பிற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதை பிரச்சனை தொடர்பாகத் தனது தரப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர்,  Komisioner Sulizme Affendy Sulaiman தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset