நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில மஇகா பொறுப்பாளர் பட்டியல் இவ்வாரம் வெளியிடப்படும்: டான்ஸ்ரீ ராமசாமி 

ஈப்போ:

பேரா மாநில மஇகா பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல்  இவ்வாறு அறிவிப்பு செய்யப்படும் என்று மாநில மஇகா தலைவர்  டான்ஸ்ரீ  எம். இராமசாமி கூறினார். 

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தம்மை நடந்து முடிந்த மாநில மஇகா மாநாடில் மாநிலத்  தலைவராக நியமனம் செய்யப பட்டதைத் தொடர்ந்து மாநில செயலாளராக புக்கிட் கந்தாங் தொகுதி காங்கிரஸ் தலைவர் ஜி. சண்முகவேல் நியமனம் செய்யப்பட்டார்

இதர பொறுப்பாளர்கள் எப்போது நியமனம் செய்யப்படுவார்கள் என்று பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கு இவ்வாரம் பதில் கிடைக்கும் என்ற அவர் ,  அதில் இடம் பெறவிருக்கும் பெயர் பட்டியல் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்

மாநில தலைவராக நியமனம்  செய்யப்பட்டதைத் தொடர்ந்து இம்மாநிலத்தில் உள்ள கிளை தலைவர்கள், கிளைகளின் பொறுப்பாளர்களுடன் தொகுதி நிலையில் சந்திப்பு நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் கிளைத் தலைவரகள் மற்றும் பொறுப்பாளர்கள் நல்ல ஆதரவை வழங்கி வருகிறார்கள். கட்சியை மேலும் வலுப்படுத்த இனைஞர்கள மற்றும் மகளிர்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது.

இந்த நாட்டு இந்தியர்கள் எதிர் நோக்கம் பிரச்னைகளுக்கு குரல் எழுப்ப மஇகா என்றும் தயாராக உள்ளது என்று விளக்கம் அளித்தார்.

மேலும் பேசிய அவர் மஇகாவில் இளைஞர்கள் பலர்  இணைய ஆர்வம்  கொண்டுள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் மஇகாவில் பலத்தை வலுப்படுத்த  தம்மால்  முடிந்ததை செய்வேன் அதற்கு கிளைத் தலைவர்களின் ஆதரவு  தேவை என்று ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பில உரையாற்றியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset