நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜீ தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி: சாந்தினி கோர் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார் 

கோலாலம்பூர்: 

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழில் மகா நடிகை நிகழ்ச்சி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது 

இந்த நிகழ்ச்சியில் மலேசியா சார்பாக பிரபல நடிகை சாந்தினி கோர் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் வாயிலாக அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் 

மூன்நிலா, முகேன் ராவ் ஆகிய நடிகர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை சாந்தினி கோர் தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளார் 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மகா நடிகை நிகழ்ச்சி திறமை மற்றும் சிறந்த நடிகைகளை அடையாளம் காணும் நிகழ்ச்சியாக படைக்கப்பட்டுள்ளது 

மலேசிய ரசிகர்கள் ஆஸ்ட்ரோ அலைவரிசை 223 இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த மகா நடிகை நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset