நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

யேமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

புது டெல்லி: 

யேமன் நாட்டில் ஹவூதி போராளிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் ஹவூதிக்களின் ராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் துறைமுக நகரான ஹொடைடாவில் உள்ள விமான நிலையம், கத்தீப் பகுதியில் உள்ள ராணுவத் தளங்கள் மீது 7 குண்டுகளும், சனா நகரில் உள்ள செய்யானா பகுதியில் 4 குண்டுகளும் தாமர் மாகாணத்தில் 2 குண்டுகளும் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானங்கள், போர்க் கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

யேமன் நாட்டில் நுழைந்த அமெரிக்க  ராணுவ டிரோனையும், அமெரிக்க போர்க் கப்பல்களின் மீதான தாக்குதலையும் ஹவூதிகள் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset