
செய்திகள் கலைகள்
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
சென்னை:
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் விஜய் பங்கேற்றதால் தொண்டர்களும் ரசிகர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது.
பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் பாபி தியோல், நரைன், இயக்குனர் எச்.வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேநாளில், இன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் எல்லாம் வளர்த்து புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் நிகழ்வும் நடந்தேறியது.
அரசியலில் முதல்படியாக பார்க்கப்படும் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே அங்கு பெருமளவு ரசிகர்கள் கூடினர்.
ஆனால் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளே பங்கேற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 11:09 am
Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
September 2, 2025, 4:32 pm