
செய்திகள் உலகம்
லெபனான், காசா, ஏமன், சிரியா ஆகிய நாடுகள் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் பன்முனைத் தாக்குதல்
டெல் அவிவ்:
லெபனான், காசா, ஏமன், சிரியா மீது ஒரே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பன்முனைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் காசா பகுதி பிரதமர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-குவாசிர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், லெபனான், காசா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது ஒரே நேரத்தில் பன்முனைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
எனினும், ஹமாஸ் படையினர் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm