நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது

வாஷிங்டன்:

கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்றினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் இதனை உறுதிப்படுத்தியதாக ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

இப்பாதிப்புகள் தொடர்பில் கலிபோர்னியா அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கலிஃபோர்னியாவில் இரண்டு பாதிப்புகளுக்கும் இடையே எந்த தொடர்பும் அல்லது இணைப்பும் கண்டறியப்படவில்லை.

இவை விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு வைரஸ் பரவுவதற்கான தனித்தனி சம்பவங்கள் என்பதைக் குறிக்கிறது.

பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எச்5என்1 பரவுவதைக் கட்டுப்படுத்த கலிபோர்னியா, பிற மாநிலங்களில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளுடன் அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுகிறது.

இந்த ஆண்டு, அமெரிக்காவில் கால்நடைகளுக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சல் முதன் முறையாக கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset