நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்

புது டெல்லி:

டியாகோ கார்சியா தீவை உள்பட சாகோஸ் தீவுப் பகுதியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

டியாகோ கார்சியா தீவை அமெரிக்கா தனது விமானப் படை தளமாக பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ - பிசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகோஸ் தீவின் உரிமைகளை மோரீஷஸிடம் ஒப்படைத்ததாக பிரிட்டன்  தெரிவித்தது.
சாகோஸ் தீவுப் பகுதிகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மொரீஷியஸின் கோரிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

பிரிட்டன் - மொரீஷியஸ் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset