நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை பிரியங்கா மோகனுக்கு நேர்ந்த சோகம்: நிகழ்ச்சி மேடை திடீரென்று சரிந்து விழுந்ததில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் 

ஹைதரபாத்: 

தெலுங்கானா மாநிலத்தின் தோருர் பகுதியில் பேரங்காடி திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகன் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையின் மேல் இருந்த போது திடீரென்று அந்த மேடை சரிந்து விழுந்தது 

திடீரென்று கீழே விழுந்த நடிகை பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் தமது சமூக ஊடகத்தில் தெரிவித்தார். 

நடிகை பிரியங்கா மோகன் உடன் பேரங்காடி நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் யாவரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர். 

மேடை சரிந்துவிழும் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ்ச்சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset