நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் பலி

டமாஸ்கஸ்:

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் சிரியா நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்த போது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் பலியானார். 

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி கடுமையான தாக்குதல் நடத்தியது. 

இந்த கொடூர தாக்குதல் நடந்து ஓராண்டை நெருங்கி வரும் சூழலில் இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. 

இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27ஆம் தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. 

இதனால், கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தற்போது நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-காசிர். 

சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்தபோது, இஸ்ரேல் நடத்திய திடீர்  தாக்குதலில் பலியானார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset