
செய்திகள் மலேசியா
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியர் கைது
லாருட்:
சிசுவின் சடலத்தை ஆற்றங்கரையில் வீசிய கம்போடிய, நேப்பாள தம்பதியரை போலிசார் கைது செய்துள்ளனர்.
தைப்பிங் போலிஸ் தலைவர் முகமட் நசீர் இஸ்மாயில் இதனை உறுதிப்படுத்தினார்.
தைப்பிங் சிம்பாங், லாருட் ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை போலிசார் கண்டெடுத்தனர்.
தைப்பிங் மருத்துவமனை அவசரப் பிரிவில் இருந்து 43 வயதான கம்போடியர் ஒருவர் அதிகாலை 3.32 மணிக்குப் பிரசவித்ததாக போலிசாருக்கு புகார் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கம்போடிய, நேப்பாள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318 இன் படி விசாரணை நடத்தப்பட்டது,
இது வேண்டுமென்றே உடலை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் குழந்தையின் பிறப்பை மறைக்கிறது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 2:17 pm
புக்கிட் மேரா சீனப்பள்ளி கூரையைச் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்: சிவக்குமார்
July 3, 2025, 2:16 pm
கார் விபத்திற்குப் பிறகு போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் கைது
July 3, 2025, 1:23 pm
ஜாலான் மஸ்ஜித் இந்தியா: நில அமிழ்வு தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவு
July 3, 2025, 12:43 pm
3D தொழில்நுட்பத்தில் உடல் உறுப்புகளைத் தயாரிக்கும் ஹாங்காங்
July 3, 2025, 12:33 pm
இந்தியா செல்ல இனி இலவச விசா இல்லை: தூதரகம் அறிவிப்பு
July 3, 2025, 11:32 am