நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை

சிங்கப்பூர் -

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரனுக்கு  12 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரன் மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

அவற்றில் அவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதற்கான தண்டனையை நீதிபதி இன்று அறிவித்தார்.

அரசாங்கச் சேவையின்போது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தண்டனைச் சட்டப் பிரிவு 165ன்கீழ், பொதுச் சேவை ஊழியர் ஒருவர், அவரது அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும் விலைமதிப்புள்ள எதையும் இலவசமாகவோ போதிய கட்டணமின்றியோ ஏற்றுக்கொள்வதோ பெறுவதோ குற்றமாகும்.

62 வயதாகும் ஈஸ்வரன் சிங்கப்பூரில் ஐம்பது ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் அரசியல் பிரமுகர் ஆவார்.

கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த ஈஸ்வரனை விசாரிப்பதாக அறிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி 18ஆம் தேதி அவர் அனைத்து அதிகாரத்துவப் பதவிகளிலிருந்தும் விலகினார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset