செய்திகள் உலகம்
ஈரான் தனது வான் எல்லைகளை மூடிவிட்டது: உச்சமடைகிறது போர்
தெஹ்ரான்:
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரைத் தொடா்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த அமைப்பின் மத்திய கவுன்சில் துணைத் தலைவா் நபீல் கௌக் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் உயிரிழந்தனா்.
கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனீயே ஈரானில் உயிரிழந்தனா்.
ஈரானின் ஆதரவு பெற்ற இந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.
மேலும் நாளை வியாழக்கிழமை காலை(அக்.3) வரை ஈரானில் அனைத்து விமானங்கள் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போரால் பெரும் பதற்றம் உருவாகி இருக்கிறது. திடீரென்று ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதால் இஸ்ரேலிய நகரங்களில் பொது மக்கள் பீதியடைந்து உள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து, தனது வான் எல்லைகள் மூடப்பட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்தது. மேலும் இஸ்ரேலுக்கு வரும் விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 9:18 pm
யேமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
October 5, 2024, 4:06 pm
சீனாவில் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு 45% வரை வரி விதிக்கப்படும்
October 4, 2024, 12:10 pm
லெபனான், காசா, ஏமன், சிரியா ஆகிய நாடுகள் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் பன்முனைத் தாக்குதல்
October 4, 2024, 12:06 pm
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது
October 4, 2024, 10:44 am
மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்
October 3, 2024, 3:38 pm
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் பலி
October 3, 2024, 1:33 pm
இலங்கை – இஸ்ரேல் அனைத்து விமான சேவைகளும் இரத்து
October 3, 2024, 11:20 am
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை
October 3, 2024, 11:15 am