நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து பள்ளிப் பேருந்து தீயில் அழிந்த சம்பவம்: பேருந்து ஓட்டுநர் கைது

பேங்காக்:

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில்  மாணவர்களும் ஆசிரியர்களும் சென்ற பேருந்தில் தீப்பிடித்துக்கொண்ட சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். 

தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்களை அடையாளம் காண குடும்பத்தார்  பேங்காக்கிற்குச் சென்ற நிலையில், பேருந்து ஓட்டுநரைக் போலிசார் கைது செய்தனர்.

பள்ளிச் சுற்றுலாவுக்காக, பேங்காக்கிற்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தாய் தானி மாநிலத்திலிருந்து அயுத்தயா, நொந்தாபுரி மாநிலங்களுக்குச் சென்ற அப்பேருந்தில் ஆறு ஆசிரியர்களும் பாலர் பள்ளி மாணவர்கள் முதல் 13, 14 வயது வரையுள்ள 39 மாணவர்களும் இருந்தனர்.

நெடுஞ்சாலையில் சென்றபோது பேருந்தின் சக்கரங்களில் ஒன்று வெடித்ததால் சாலைத்தடுப்பில் பேருந்து மோதி தீப்பிடித்தது.

தீ வேகமாகப் பரவியதால் பலராலும் வெளியேற முடியவில்லை.

இந்நிலையில், தீவிபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் உத்தரவிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset