நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெந்தாரி கோர்ட்டில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்; கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: டத்தோ கலைவாணர்

பெட்டாலிங்ஜெயா:

பண்டார் சன்வேவில் மலேசிய வணிகர்களுக்குச் சவால் விடுக்கும் அந்நிய நாட்டினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

சன்வே வட்டாரத்தில் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மெந்தாரி கோர்ட் விளங்கி வருகிறது.

கிட்டத்தட்ட 7 ஆயிரம் வீடுகள் இங்கு உள்ளது.

இப்பகுதிகளில் கடைகளும் உள்ளன. 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெள்ளி வரை வாடகை செலுத்தி மலேசிய வணிகர்கள் வியாபாரம்ம் செய்து வருகின்றனர்.

ஆனால் அந்நிய நாட்டில் வீட்டிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இது மலேசிய வணிகர்களுக்கு பெரும் பாதிப்பும் நஷ்டமும் ஏற்படுகிறது.

அதன் அடிப்படையில் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset