
செய்திகள் மலேசியா
மைடின் பேரங்காடியின் தீபாவளி கொண்டாட்டம்: துணையமைச்சர் சரஸ்வதி தொடக்கி வைத்தார்
சுபாங்:
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மைடின் பேரங்காடியின் ஏற்பாட்டில் நடைபெற்றபிரகாசமான தீபாவளி கொண்டாட்டத்தை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கலாச்சாரம் வலுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது போன்று கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என செனட்டர் சரஸ்வதி தமது உரையில் கூறினார்.
இன பேதமின்றி மைடின் பேரங்கடி சமூகத்துடன் அணுக்கமான தொடர்பை ஏற்படுத்தி வருகிறது. எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும், அந்த கொண்டாட்டத்திற்கு மைடின் பேரங்கடி முன்னுரிமை வழங்கி வருகிறது.
மொத்த, சிறிய விற்பனை பேரங்காடி குழுமமான மைடின் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு ஏற்ப அனைத்து கொண்டாட்டங்களுக்கும் மைடின் பேரங்கடி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மைடின் பேரங்கடி நடத்தி வரும் இது போன்று சமூக நலன் நிகழ்ச்சிகளுக்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய இந்த கொண்டாட்டத்தில் 50 குடும்பங்களுக்கு மைடின் பேரங்காடியின் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:36 pm
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm