செய்திகள் மலேசியா
கெடா வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 633ஆக குறைந்தது
பாலிங்:
கெடா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 633ஆக குறைந்து உள்ளது.
கனமழையை தொடர்ந்து கெடா மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ள்ப் பெருக்கு ஏற்ப்பட்டிருந்தது.
இந்நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 212 குடும்பங்களைச் சேர்ந்த 633 பேராக குறைந்துள்ளது.
நேற்று இரவு 268 குடும்பங்களில் இருந்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் 10 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைப்பட்டுள்ளனர்,
கெடா மாநில சமூக நல, பேரிடர் துறையினர் இதனை உறுதிப்படுத்தினர்.
கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பாலிங்கில் (247 பேர், 92 குடும்பங்கள்), போக்கோக் செனாவில் (110 பேர், 34 குடும்பங்கள்) ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
