செய்திகள் உலகம்
ஈரானை தாக்க திட்டமா?: இஸ்ரேல் பிரதமர் விளக்கம்
ஜெருசலம்:
மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிகழ்த்தப் போகிறதா என்கிற வலுத்த சந்தேகத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் ஈரான் மக்களுக்கு பக்கபலமாக இஸ்ரேல் நிற்கும் என்று அவர் பேசியிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஸாவையும் லெபனானையும் பாதுகாக்க வேண்டுமென்று ஈரான் தலைமை அந்நாட்டு மக்களிடம் சொல்லி வருவதாகவும், உணர்ச்சிகரமான இத்தகைய உரைகள் மூலம் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றத்தை ஈரான் தலைமை அதிகரித்து வருவதாகவும் ஈரான் தலைமை மீதான குற்றச்சாட்டுகளை அந்நாட்டு மக்கள் முன் வைத்துள்ளார்.
மேலும், ஈரான் தலைமை, மக்களை படுகுழியில் தள்ளிவிட ஆயத்தமாகி வருவதாகவும் ஈரானிய மக்களை நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஈரானிய மக்கள் மீதான அக்கறை தங்கள் நாட்டு தலைமைக்கு இல்லை என்றே பெரும்பான்மையான ஈரானிய மக்கள் கருதுகின்றனர்.
அப்படி மக்கள் மீது அக்கறையிருந்தால், பில்லியன் கணக்கிலான பெருந்தொகையை மத்திய கிழக்கு பகுதிகளில் போருக்காக செலவழிக்கமாட்டார்கள்.
வெளிநாடுகளில் போரில் செலவழித்துள்ள பணத்தை ஈரானிய குழந்தைகளின் கல்விக்காகவும், சுகாதார கட்டமைப்பிலும், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் செலவழித்திருக்கலாமே.
ஒருவழியாக ஈரான் சுதந்திரமடைந்தால்,மக்களாகிய நீங்கள் எதிர்பார்ப்பதைவிட சீக்கிரமாகவே அந்த தருணம் வரும்.
அப்போது அனைத்தும் மாறும் என்று ஈரானிய மக்களிடம் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 10:09 pm
இலங்கையில் கோர பஸ் விபத்து: மூவர் பலி, 27 பேர் படுகாயம்
December 21, 2024, 6:10 pm
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஏமன்
December 21, 2024, 11:52 am
அமெரிக்க அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
December 20, 2024, 10:50 pm
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி
December 20, 2024, 7:33 pm
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am