நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார் 

சுங்கை சிப்புட்:  

ஈவூட்  புதிய தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார். இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு வரும் 6.10.2024( ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.30 க்கு நடைபெறவுள்ளதாக இந்நிகழ்வின் தகவல் பிரிவு தலைவரும், கோலகங்சார் ஊராட்சி மன்ற உறுப்பினருமான கோபி இராமசாமி தெரிவித்தார்.

பிரதமர் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளியை தொடக்கி வைக்கும் அரிய நிகழ்வாகும். இப் பள்ளி 13 மில்லியன் ரிங்கிட் செலவில் அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப் பள்ளி விசாலமான நிலப்பரப்பை கொண்டுள்ளது. காலப்போக்கில் அதிகமான வசதிகளை இங்கு உருவாக்க போதிய இடம் உள்ளதாக அவர் மகிழ்சியுடன் கூறினார்.

நம் நாட்டின் மேனாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்போவதாக கடந்த ஜனவரி 10இல் 2012 தலைநகர் கின்றாரா தமிழ்ப்பள்ளியில் அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பால் உருவான ஒரு தமிழ்ப்பள்ளிதான் இந்த சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி என்று அவர் சுட்டிக்காட்டினார்.

May be an image of 8 people

இப் பள்ளி அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய நவீன தமிழ்ப்பள்ளியாகும். குறிப்பாக, விசாலமான நிலப்பரப்பை கொண்டுள்ளதால் இங்கு சிறந்த விளையாட்டு திடல், அருந்தகம், அறிவியல் கூடம், இசைப் பயிற்சி அறை, கலைக்கல்வி அறை, வடிவமைப்பு தொழில்நுட்ப பட்டறை அறை, உடற்கல்வி கூடம், குறைநீக்கல் கற்றல் கற்பித்தல் அறை, ஓய்வு பகுதியுடன் சிகிச்சை அறை, பாடநூல் அறை மற்றும் சிற்றுண்டியும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளியின் திறப்பு விழா சிறப்பாக அமைந்திட இவ்வட்டார பொதுமக்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கி இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்போடு அழைப்பதாக பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியத்தினர் கேட்டுக்கொண்டனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset